என் நாவில் தமிழ் சரியாக வரவில்லை: பிரபல பாடகி சுசீலா கவலை!

என் நாவில் தமிழ் சரியாக வரவில்லை: பிரபல பாடகி சுசீலா கவலை!

நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வரும் பி.சுசீலா, சமீபத்தில் அளித்த பேட்டியில், இன்னும் தனக்கு சரியான தமிழ் உச்சரிப்பு வரவில்லை எனக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் சாதனை பாடகியாக வலம் வந்தவர் பி.சுசீலா. 83 வயதாகும் சுசீலா இசை நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்துகொண்டு வருகிறார்.

சமீபத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் அவரிடம் பேசியபோது,

“நான் பாடிய பாடல்கள் 30000, 40000 என்று எண்ணிக்கை சொல்கிறார்கள். என்னிடம் சரியான கணக்கு இல்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென் இந்தியாவில் உள்ள மொழிகளில் எல்லாவற்றிலும் பாடிவிட்டேன்.

பாடுவதை கடவுள் கொடுத்த வரம் என்றே சொல்வேன். தமிழ்நாடு என்னை அள்ளி அணைத்துக் கொண்ட பூமி. என்னை பொறுத்தவரை, இன்றும் என்னுடைய தமிழ் உச்சரிப்பு சரியானதாக இல்லை என்றே சொல்வேன்.

தெலுங்கு வாடை அடிக்கின்ற தமிழ்தான் அது. மணக்கும் தமிழ் என் வாயில் இருந்து வர வேண்டும் என்றால் நான் இந்த மண்ணில் பிறந்திருக்க வேண்டுமென நினைத்துப் பார்ப்பேன்.

அத்தோடு நான் பாடிய தமிழ் பாடல்கள் எல்லாம் சவாலாக எடுத்து பாடியவையே” எனக் கூறியுள்ளார்.

Facebook Comments