எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த மோடி.

எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த மோடி.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது 65ஆவது பிறந்த நாளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகின்றார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி ஊடாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பிரசாரத்துக்காக திருப்பரங்குன்றத்துக்கு எடப்பாடி பழனிசாமி விஜயம் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments