உள்ளுர் வீதிகளை புனரமைக்க கோரி பொது மக்களும், மாணவர்களும் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவைச ் சேர்ந்த பிரமந்தனாறு கிராம மக்களும், அப்பிரதேச மக்களும் இன்று (02-10-2019) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனனர்.

தங்களது கிராமத்தில் இதுவரை காலமும் எந்த வீதியும் நிரந்தரமாக புனரமைக்கப்படவில்லை மத்திய அரசும் சரி கடந்த ஐந்து வருடங்களாக ஆட்சியில் இருந்த மாகாண அரசும் சரியும் தற்போது அதிகாரத்தில் உள்ள கரைச்சி பிரதேச சபையும் சரி எங்களது கிராமத்தை புறக்கணித்தே வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைக் கிராமமான எங்களது கிராமம் மிக மோசமான உட்கட்டுமான குறைப்பாடுகளை கொண்டுள்ளது. இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபை உட்பட சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பல தடவைகள் எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்த பொது மக்கள்

அரசியல் ரீதியாகவும் வேறு காரணங்களுக்காகவும் எங்களது கிராமத்தை புறக்கணிக்க வேண்டாம் என சம்மந்தப்பட்ட திணைக்களை கோருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பொது மக்களும், மாணவர்களும் கலந்துகொண்டனனர்.


Facebook Comments