உலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும்!

உலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும்!

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ணத்தினை பாகிஸ்தான் அணி கைப்பற்றும் என அந்த அணியின் சகல துறை வீரர் சொயிப் மலிக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான சொயிப் மாலிக் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 உலக கிண்ணத்தினை வெல்லும் திறமை பாகிஸ்தானிடம் உள்ளது என சொயிப் மலிக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்

‘‘உலக கிண்ணத்தை வென்று கையில் ஏந்தும் திறமை எங்களிடம் உள்ளது. ஆனால், திறமை மட்டும் இருந்தால் எதையும் வெல்ல முடியாது. சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும்.

உலக கிண்ணத்தை வெல்லும் அளவிற்கான தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் மற்றும் துடுப்பாட்ட வீரர்களை கொண்டுள்ளோம்.

நினைவுகூரத்தக்க 2019 உலக கிண்ணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

Facebook Comments