உலகெங்கும் வெளியானது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம்!

உலகெங்கும் வெளியானது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம்!

லைக்கா புரடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) உலகெங்கும் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் காட்சிகள் இன்று அதிகாலை 5 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை நடிகர் சிம்பு தனது ரசிகர்களுடன் பார்வையிட்டுள்ளார்.

திரையரங்குகளுக்கு செல்லும் ரசிகர்களுகம் தங்களது மகிழ்ச்சியை சமூகவலைத்தளத்தில் தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் முதல் நாள் காட்சியை பார்வையிடுவதற்காக திரையரங்குகளில் குடும்பத்துடன் ரசிகர்களை காணக்கூடியதாகவுள்ளது.

ஹிப் ஹொப் தமிழா ஆதியின் இசையில் இத்திரைப்படத்தில் மஹத், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பாரிய எதிர்பார்ப்புகளுடன் வந்துள்ள இத்திரைப்படம், வசூலில் சாதனை படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. காலை முதலே திரையரங்குகள் யாவற்றிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது.

அந்தவகையில், லைக்கா புரடக்ஷன்ஸின் ஏனைய திரைப்படங்களைப் போல இத்திரைப்படமும் வெற்றிநடை போடும் என்பது நிச்சயம்.

Facebook Comments