உலகின் முதல் 5G தொலைபேசி அறிமும்!

உலகின் முதல் 5G தொலைபேசி அறிமும்!

ZTE நிறுவனம் (Corporation) மற்றும் சீனா யுனிகாம் (China Unicom) இணைந்து உலகில் முதல் முறையாக 5G தொழில்நுட்பத்தில் Voice Call செய்து அசத்தியுள்ளது.

இதற்கு ZTE உருவாக்கிய 5G Prototype ஸ்மார்ட்தொலைபேசி பயன்படுத்தப்பட்டுள்ளது. Shenzhen 5G சோதனை மையத்தில் உலகின் முதல் 5G Voice Call வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியில் Voice Call மட்டுமின்றி Groom Call, இணையத்தள வீடியோ மற்றும் Browsing உள்ளிட்டவையும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.

சீனா யுனிகொம் நிறுவனம் 5G சேவை வழங்க சோதனை செய்யும் முதல் இடமாக ஷென்செனை தேர்வு செய்தது. இந்த வட்டாரம் முழுமையான இணையத்தளம் உபகரணங்களை கட்டமைப்பது, சிறப்பு சேவைகளை வழங்குவது, ரோமிங் மற்றும் சேர்த்திணைப்பு (Interconnection) உள்ளிட்டவற்றை பலகட்டங்களில் சீனா யுனிகொம் சோதனை செய்து வருகின்றது.

சோதனைகளில் ZTE 5G என்ட்-டு-என்ட் தீர்வுகளான Radio Access Network, Core network, Transform Network மற்றும் Intelligence Generation உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.

மேலும், இந்த சோதனைகளில் 5G தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்களும் சீராக இயங்கச் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Facebook Comments