உடலுக்குப் பலம் தரும் தினை!

உடலுக்குப் பலம் தரும் தினை!

எலும்பு மற்றும் நரம்புகளுக்குப் பலம் கொடுக்கக் கூடியதும், கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையதும், ரத்த ஓட்டத்தைச் சீர்செய்ய கூடியதுமான தினையின் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்.

அரிசி, கோதுமையைவிட தினையில் சர்க்கரைச் சத்து குறைவாக உள்ளது. கொழுப்புச் சத்தைக் கரைத்து உடலைச் சீர்செய்கிறது.

மூளைக்கு இதமான சூழலை ஏற்படுத்தி மன உளைச்சலைப்போக்கும் மருந்தாகத் தினை விளங்குகிறது.

ஒற்றைத் தலைவலி, மாரடைப்பு வராமல் தடுக்கிறது. நார்ச்சத்து மிக்கது என்பதால் மலச்சிக்கலை சரிசெய்கிறது.

எலும்புகளைப் பலப்படுத்த
தினை மாவுடன் தேன், நெய் விட்டுக் கலக்கவும். இதை தினமும் 2 தேக்கரண்டி சாப்பிட்டு வர எலும்பு, நரம்புகளைப் பலப்படும். ஆரோக்கியத்தைக் கொடுக்கும். கொழுப்பைக் கரைக்கும்.

தினைப் பாயாசம்
உடலுக்குப் பலம் தரும் தினை பாயாசம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்: தினை, வெல்லம், ஏலக்காய், முந்திரி, பாதாம்.

செய்முறை
ஒரு பாத்திரத்தில் தினை மாவு எடுத்து நீர்விட்டு வேக வைக்கவும். இது, கஞ்சி பதத்தில் வந்தவுடன் வெல்லக்கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனுடன் ஏலக்காய், முந்திரி, பாதாம் சேர்த்து கலந்து சிறிது நெய்விடவும்.

கடைசியாக தேங்காய்ப்பால் விட்டுக் கலந்து எடுக்கவும். இது உடலுக்குப் பலம் தரும் முக்கிய உணவாகும்.

Facebook Comments