ஈழத்தமிழர் மறக்க முடியாத உயரிய மனிதர் இயற்கை எய்தினார்!

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத உயரிய மனிதர் இயற்கை எய்தினார்!

யாழ். பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் என்.சிவராஜா அவர்கள் நேற்று மாலை யாழில் வைத்து இயற்கை எய்தினார்.

அரோட் நிறுவனத்தின் நிறுவனரும் (மாற்று திறனாளிகள் பராமரிப்பு வலுப்படுத்தகம்), சிறந்த சமூக செயற்பாட்டாளரும், உலக சுகாதார நிறுவனத்தின் வட பிராந்திய இணைப்பாளருமாக இவர் இருந்துள்ளார்.

அத்துடன், ஆரம்பகால விடுதலைப்புலிகளின் முதலுதவி பயிற்சியாளருமாக இவர் கடமையாற்றியுள்ளார்.

வைத்தியர் என்.சிவராஜா அவர்கள் தியாகதீபம் லெப் கேணல் திலீபனின் உடலை யாழ். பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட பீடாதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments