இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் முகநூல் பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டும்!

இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் முகநூல் பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டும்! வெடிக்கும் புதிய சர்ச்சை!

இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் முகநூல் பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டுமென இலங்கை அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கட் வர்ணணையாளருமான ரசல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் ஆர்னல்ட் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் திசர பெரேரா, இந்நாள் தலைவர் லசித் மாலிங்க மற்றும் அவரது மனைவிக்கு எதிராக அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை அணியின் வீரர்கள் சமூக ஊடக வலையமைப்புக்களை பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டுமென ஆர்னல்ட் கோரியுள்ளார்.

Facebook Comments