இலங்கையை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கட் தொடர் எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் போட்டியில் பங்குகொள்ளும் பங்களாதேஷ் அணி நேற்று மாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற பின்னர் இலங்கைக்கு முதல் தடவையாக பங்களாதேஷ் அணி வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டிக்கான இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரம் வௌியிடப்பட்டுள்ளதுடன், 22 வீரர்களை உள்ளடக்கிய இந்தப் பட்டியலில் தினேஷ் சந்திமால் உள்ளடக்கப்படவில்லை என்பதுடன், திமுத் கருணாரத்ன தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

Facebook Comments