இலங்கையை உலுக்கிய கோர விபத்து! 6 பேர் பலி!

இலங்கையை உலுக்கிய கோர விபத்து!  6 பேர் பலி!

கொழும்பு – சிலாபம் வீதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து தொடர்பான தகவல்களை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

கொழும்பு – சிலாபம் வீதியில் வென்னப்புவ, நைனமடம் பாலத்திற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிலாபம் நோக்கி பயணித்த கார் ஒன்று, முன்சென்ற கூலர் வாகனத்துடன் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் 24 முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

காலியை சேர்ந்த 32 வயதான ரோஹன செனவிரத்ன, வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான மெத்தசிங்க ஆரச்சிகே மனோஜ் அநுருத்த பெர்ணான்டோ, 26 வயதான ஜனித ருஷான் பீரிஸ், 34 வயதான வலேகெதர விக்ரமசிங்க பண்டார, 36 வயதான பிரதீப் சந்தன 34 வயதான சஞ்ஜீவ பெர்ணான்டோ ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

பிரதீப் சந்தன என்பவரே வானத்தை செலுத்திச் சென்ற சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து ஒட்டுமொத்த இலங்கையர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments