இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 2 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு அகற்றியுள்ளது.

அந்த வகையில் இரத்தினபுரி, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதுடன், கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அகற்றப்பட்டுள்ளது.

அதேவேளை மாத்தறை மாவட்டத்திற்கு புதிதாக மண்சரிவு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே மக்களை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், தெற்கு அந்தமான் தீவிற்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் தினங்களில் மத்திய வங்காள விரிகுடா ஊடாக இந்தியாவிற்குள் நுழையும் சாத்தியம் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த தாழமுக்கம் டிசம்பர் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இலங்கையின் கிழக்கு திசையில் நாட்டுக்கு அருகில் பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments