இலங்கைக்கான பயணத்தடையை நீக்கியது அவுஸ்திரேலியா

இலங்கைக்கான பயணத்தடையை நீக்கியது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய பிரஜைகள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைக்கான பயணத்தடையை நீக்கிய போதிலும், இலங்கை ஊடகங்களின் செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா செல்லும் வேளையில் பாதுகாப்பு நிலைமை தொடர்பான நாளாந்த செய்திகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் தமது நாட்டு பிரஜைகளுக்கு பயணத்தடையை விதித்திருந்த நிலையில், பெரும்பாலான தற்போது அதனை தளர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments