இறங்குதுறையினை புனரமைத்து வெளிச்சவீடுகளை அமைத்துத்தருமாறு கோரிக்கை!

பூநகரி இலவங்குடாப்பகுதியில் இறங்குதுறையினை புனரமைத்து வெளிச்சவீடுகளை அமைத்துத்தருமாறு பிரதேச கடற்தொழிலாளர்கள் கோரிக்கை!

கிளிநொச்சி பூநகரி இலவங்குடாப்பகுதியில் இறங்குதுறையினை புனரமைத்து வெளிச்சவீடுகளை அமைத்துத்தருமாறு பிரதேச கடற்தொழிலாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்பட்ட கிராஞ்சி சிறிமுருகன் கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்திற்கு உட்பட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தொழிலாக கடற்தொழிலை முன்னேடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, இலவங்குடாப்பகுதியில் தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் தமது கடற்தொழில் உபகரணங்களையும் மீன்பிடிப்படகுகளையும் கரைசேர்ப்பதில் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப்பிரதேசத்தில் காணப்படுகின்ற கடற்தொழில் இறங்குதுறைகளை ஆழப்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை பிரதேசத்திலிருந்து கடற்தொழில்களுக்குச்செல்லும் கடற்தொழிலாளர்கள் கரைசேர்வதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

அதாவது வெளிச்சவீடுகள் இன்மையால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

ஆகவே இந்தப்பிரதேத்தில் வெளிச்ச வீடு ஒன்றினை அமைத்துத்துருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Facebook Comments