இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 47 பேர் பலி!

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 47 பேர் பலி!

சிம்பாப்வேயில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேயிலிருந்து ருசாபே நகருக்கு செல்லும் சாலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து இடம்பெற்றதும் இது பற்றி பொலிஸார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் அதிகாரியொருவர்,

இந்த விபத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுள் பலரது நிலைமைகள் கவலைக்கிடாகவுள்ளது. ஆகையால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments