இரண்டு தோற்றத்தில் மிரட்டவரும் அரவிந்த் சாமி!

இரண்டு தோற்றத்தில் மிரட்டவரும் அரவிந்த் சாமி!

தனது புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்தில் அரவிந்த் சாமி நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சலீம்’ பட இயக்குனர் நிர்மல்குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதுடன், எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பாக மதியழகன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படம் குறித்து மதியழகன் கருத்துத் தெரிவிக்கையில்,

‘இது ஒரு முழுமையான ஆக்சன் திரைப்படம். அரவிந்த்சாமி இரண்டு தோற்றங்களில் வருவதால் தனது உடல் எடையை கொஞ்சம் அதிகரித்துள்ளார்.

படத்தின் பெஸ்ட் லுக் மார்ச் முதல் வாரத்திலும், படப்பிடிப்பு மார்ச் மாதத்தின் இறுதியிலும் ஆரம்பிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் மதியழகன் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments