இன்றைய ராசிபலன் 08-07-2019

இன்றைய ராசிபலன் 08-07-2019

மேஷம்

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்தக் கொள்வீர்கள். அதிகாரப் பதவி யில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்

மிதுனம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயரும் நாள்.

கடகம்

கடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிதங்கும். அழகு, இளமைக்கூடும். கேட்டஇடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபா ரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார்.புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன்நுழைவதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். சாதார ணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்து ழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். பிள்ளைகளின்உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனு சரித்துப் போங்கள். உத்யோகத்தில் அதிகா
ரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னை களையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர் கள். மதிப்புக் கூடும் நாள்.

தனுசு

தனுசு: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளை களைபுதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள்வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்

மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்
வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அவசரப் பட்டு அடுத்தவர்களை விமர் சிக்க வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர் களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல் யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழி உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர சலுகைகளை அறிவிப் பீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.

Facebook Comments