இன்று கிளிநொச்சியில் சிவாஜிலிங்கத்தின் ஊடக சந்திப்பு.

இன்று கிளிநொச்சியில் சிவாஜிலிங்கத்தின் ஊடக சந்திப்பு.

முன்னால் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது அவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், அதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அவர் தெரிவத்தார்.

அதனை முன்னிட்டு இன படுகொலைகள் இடம்பெற்ற பகுதிகளில் அங்சலிகளை தாம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகால சட்டம் என்பவற்றின் ஊடாக அரசு தடுக்க முடியும். நீதிமன்ற தடைகளையும் இட முடியும்.

அவற்றை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சவின் காலத்திலும் பயங்கரவாத தடைச்சட்டம் இருந்தது. அக்கால பகுதியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாம் நடார்த்தினோம். அதேபோன்று இதையும் நடார்த்துவோம். மக்கள் அச்சமின்றி ஒன் று திரளுமாறும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் அவரிடம் வினவியபோது,

இந்த நினைவேந்தலை மதகுருமார்களும், சிவில் அமைப்புக்களும் இணைந்து செய்கின்றனர்.

இடத்திற்கான அனுமதியை பிரதேச சபை வழங்குகின்றது. எனவே அவ்வாறு பாதுகாப்பு தேவைப்படின் பிரதேச சபை அதனை உரிய தரப்பினரிடம் கோரி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

தற்போது ஊடகங்களை அடக்கும் வகையில் காணப்படும் சூழல் தொடர்பிலும், பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பிலும் அவர் இதன்போது கருத்து தெரிவித்தார்.

வடக்கில் இராணுவம் தேவை என அனந்தி சசிதரன் அவர்கள் கோரியதாக வெளிவந்த செய்திகள் தொடர்பில் அவரிடம் வினவியபோது,

அவ்வாறான செய்தி வெளிவந்தமையை அனந்தி சசிதரன் அவர்கள் மறுத்துள்ளதாகவும், மாவை சேனாதிராஜாவும் தான் அவ்வாறு கூறவில்லை, வேறு விதமாக அக்கருத்தை திருவுபடுத்தி வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே வடக்கில் படையினர் வேண்டும் என்ற கோரிக்கையை யாரும் விரும்பவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

Facebook Comments