இனத் துவேசம் பேசும் ஹிஸ்புல்லாவுக்கு ஆளுநர் பதவியா?

வெளிப்படையாக இனத் துவேசம் பேசும் ஹிஸ்புல்லாவுக்கு ஆளுநர் பதவியா?

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் தமிழ் மக்களை பழி தீர்க்கும் எண்ணக்கருவோடு இனத்துவேசம் பேசும் ஒருவருக்கு ஆளுநர் பதவியை ஜனாதிபதி வழங்கி இருக்கின்றமை தமிழ் மக்களிடையே அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநரை பதவி விலக கோரி திருகோணமலை, மட்டக்களப்பு, மாவட்டங்களில் இன்று டயர்கள் எரித்தும், கடைகளை அடைத்தும் மக்கள் எதிர்ப்பினை வெளிகாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தீர்வுத்திட்டங்கள் மூலம் நிம்மதியான வாழ்வு கிடைக்கும் என ஜனாதிபதிக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு இன துவேசம் பேசிவந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்திருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது ஜனாதிபதிக்கு இருந்த காழ்ப்புணர்ச்சிக்கு தமிழ் மக்களை பலி கடாவாக்கியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களின் இருப்புக்களுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் விதமான பேச்சுகளடங்கிய கானொளிகள் வெளிவந்த நிலையில் நாடாளுமன்றில் வட, கிழக்கு இணைந்தால் ‘இரத்த ஆறு ஓடும்” என தூபமிடும் ஒருவரை கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்திருப்பது தமிழர்கள் இருப்புக்கு ஐயப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு தமிழ் பிரதேசங்களில் இந்துக்களின் வணக்கஸ்தலங்களை இடித்து மீன் சந்தை தொகுதிகளை தனது இனத்திற்கு அமைத்து கொடுத்த ஒருவரை ஆளுநராக நியமித்தமை தமிழ் மக்கள் மீது மைத்திரிபால சிறிசேனவிற்கு இருக்கின்ற குரோத மனப்பான்மையை வெளிக்கொண்டு வருவதாக சமூகவலைத்தளங்களில் ஆதகங்களை தெரிவித்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் கடைகள் பூட்டப்பட்டு, பாடசாலைகள், வங்கிகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்றவற்றின் இயல்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஹர்த்தாலுக்கு அறைகூவல் விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமையை தொடர்ந்து குறித்த பகுதிகளில் அமைதி நிலவுகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments