இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

உபாதை காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடும்போது ‍அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து தவானின் வலது கை மணிக்கட்டில் தாக்கி காயத்தை ஏற்படுத்தியது.

இதனால் 3 வாரங்கள் ஓய்வெடுக்குமாறு தவானுக்கு வைத்தியர்கள் அறிவுறுத்தால் உலகக் கிண்ணத் தொடரின் ஏனைய போட்டிகளில் விளையாட மாட்டார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

Facebook Comments