இந்திய அரசியலுக்கு ஒளி தரும் புது விளக்குச் சின்னம்!

இந்திய அரசியலுக்கு ஒளி தரும் புது விளக்குச் சின்னம்!

இந்திய அரசியலுக்கு ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும் சின்னம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதியை இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ள நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு ‘டொர்ச் லைட்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டொர்ச் லைட்’ சின்னம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துள்ள கமல்ஹாசன், இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

அவரது டுவிட்டர் பக்க பதிவில்,

”மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டொர்ச் லைட்’ சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம்தான். மக்கள் நீதி மய்யம் தமிழ் நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கு ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேவேளையில், தங்களுக்கு ‘மோதிரம்’ சின்னம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, அச்சின்னம் வழங்கப்படவில்லை. மாறாக தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments