இந்தியாவின் ஒரு பகுதியை உரிமை கோரியுள்ள ஐ.எஸ்!

இந்தியாவின் ஒரு பகுதியை உரிமை கோரியுள்ள ஐ.எஸ்!

இந்தியாவின் ஒரு பகுதியை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு முதன் முறையாக உரிமை கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐ.எஸ் அமைப்பின் செய்தி இணையதளமான Amaq News Agency’யிலேயே இவ்விடயம் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதில் விலயாஹ் ஈஃப ஹிண்ட் (Wilayah of Hind) என்ற பகுதியை தங்களது புதிய மாகாணமாக ஐ.எஸ் அமைப்பு தங்களது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஜம்மு காஷ்மீர்- சோபியான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

அதில் கொல்லப்பட்ட பயங்கரவாதியான அகமது சோபி, தமது அமைப்பை சேர்ந்தவர் என்பதையும் ஐ.எஸ் அமைப்பின் இணையத்தள தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Facebook Comments