இணக்கம் இல்லாவிடின் எதுவும் செய்ய முடியாது!

இணக்கம் இல்லாவிடின் எதுவும் செய்ய முடியாது!

புதிய அரசியல் அமைப்புக்கான அனைவருது கருத்துக்கும் சபையில் சகலரும் இணக்கம் தெரிவித்தால் வழிநடத்தல் குழு அடுத்த கட்ட நடவடிகையை எடுப்போம். இதில் இணக்கம் இல்லாது போனால் அதற்கு அப்பால் எம்மால் எதனையும் செய்யயியலாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரசியல் அமைப்பு சபை இன்று காலை 10 மணிக்கு கூடிய வேளையில் அரசியலமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களின் உத்தேச வரைவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்த பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

புதிய அரசியல் அமைப்பினை கொண்டுவந்து பௌத்தத்தை அழிக்கின்றோம், நாட்டினை பிளவு படுத்துகின்றோம், வடக்கு கிழக்கை இணைக்கின்றோம் என்ற கருத்துக்களை அண்மைக் காலமாக எதிரணியினர் கூறி புதிய அரசியல் அமைப்பினை எதிர்த்து வந்தனர்.

ஆனால் இன்று முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் அவை ஒன்றுமே இல்லை. சகலரதும் கருத்துக்களை சபையில் முன்வைத்துவிட்டோம்.

இப்போது சபை தீர்மானம் எடுக்க வேண்டும். அரசாங்கமாக எமது கடமையை நாம் நிறைவேற்றிவிட்டோம். இப்போது சபையில் இது குறித்து இணக்கம் காணப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Facebook Comments