ஆப்கானிஸ்தானில் விமான தாக்குதல் – 13 பொதுமக்கள் பலி!

ஆப்கானிஸ்தானில் விமான தாக்குதல் – 13 பொதுமக்கள் பலி!

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 13 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெல்மண்ட் மாகாணத்தில் தாலிபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேட்டோ படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதன் போது வீசப்பட்ட குண்டுகள் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் விழுந்தமையால் பொதுமக்களில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் படையினருக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹெல்மண்டின் சாங்கின் மாவட்டத்தில் தாலிபன் மறைவிடைகள் தொடர்பாக கடந்த இரு மாதங்களாக பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் சுமார் 30 பொதுமக்கள் உயிரிழந்துடன் அதில் பல பெண்கள் காயமடைந்தனர்.

இதனை அடுத்து தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் பொதுமக்கள் மீதான கொடிய தாக்குதல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்தவார இறுதியில் இடம்பெற்ற வான்வளித் தாக்குதலில் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments