ஆக்ரா பேருந்து விபத்தில் 29 பேர் பலி.

ஆக்ரா பேருந்து விபத்தில் 29 பேர் பலி.

புதுடெல்லி, ஆக்ரா அருகே பயணிகள் பேருந்தொன்று 15 அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 16 க்கும் மேற்பட்டோரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

40 பயணிகளுடன் லக்னோவிலிருந்து டெல்லிக்கு சென்றுக்கொண்டிருந்த பேருந்து, யமுனா அதிவேக நெடுஞ்சாலையினை கடக்கும்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ‘ஜார்னா நாலா’வில் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் நீரில் மூழ்கிய பேருந்தில் இருந்து 27 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Facebook Comments