அவுஸ்திரேலியாவில் மற்றுமொரு அகதி தற்கொலைக்கு முயற்சி!

அவுஸ்திரேலியாவில் மற்றுமொரு அகதி தற்கொலைக்கு முயற்சி!

சிட்னி விலவூட் அகதிகள் தடுப்பு முகாமில் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் ஈராக் பின்னணி கொண்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த நபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

27 வயதான ஆப்கான் பின்னணி கொண்டவரே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இவர் கடந்த 2012ம் ஆண்டு முதல் தடுப்புமுகாமில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே விலவூட் தடுப்புமுகாமில் வாழ்ந்த Sierra Leone-ஐ சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments