அரசாங்கம் தேசிய பாதுகாப்பில் தவறிழைத்து விட்டது!

அரசாங்கம் தேசிய பாதுகாப்பில் தவறிழைத்து விட்டது!

முன்னாள் போராளிகளை கண்காணித்த அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் தவறிழைந்து விட்டதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“குண்டு வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஏற்கனவே தகவல் கிடைத்தும் அதனை தடுப்பதற்கு அரசாங்கம் எந்ததொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இதேவேளை நாட்டினுடைய பாதுகாப்புக்கு, யுத்த காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை காட்டிலும் இரண்டு மடங்கான நிதி தற்போது அரசாங்கத்தின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்படுகிறது.

மேலும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் முன்னாள் போராளிகளின் செயற்பாடுகளிலேயே அதிக கவனத்தை குற்றப்புலனாய்வு செலுத்தினர். ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு 10 வருட காலங்களாக இலங்கையில் இயங்கி வருகின்றது என்பது பற்றி கவனம் செலுத்தவில்லை.

இதற்கு காரணம், தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களை சார்ந்தவர்கள் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருப்பதாலேயே அரசாங்கம் இதனைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றது” என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Facebook Comments