அரசாங்கம் தமது சுயநலனை கருதியே செயற்படுகிறது!

கிளிநொச்சி செல்வாநகர் மக்களுடன் இன்று பா.ம உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா சந்திப்பொன்றில் கலந்து கொண்டார்.

குறி சந்திப்பு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது குறித்த பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த டக்ளஸ்,

அரசாங்கம் தமது சுயநலனை கருதியே செயற்படுவதாக தெரிவித்திருந்தார். தமிழ் தலமைகளும் அவ்வாறே செயற்பட்டு வருவதாக தெரிவித்த அவர் அரசு சுயநலத்துடன் செயற்படுவதாக தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசுடன் இணைந்தே செயற்படுவதாகவும், எந்தவொரு நாட்டிலும் அரசுடன் எதிர் கட்சியினர் ஆதரவு கொடுத்து செயற்பட்ட வரலாறு கிடையாது எனவும் அவர் இதன்போது ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

Facebook Comments